நான்கு வழிகளில் ஒரு வழி தெரிவு செய்யப்பட்டது!! - TamilnaathaM

Breaking

Home Top Ad

Post Top Ad

Tuesday, October 16, 2018

நான்கு வழிகளில் ஒரு வழி தெரிவு செய்யப்பட்டது!!

தமிழ் மக்களின் எதிர்கால அரசியல் செயற்பாடுகள் தொடர்பான மாபெரும் மக்கள் ஒன்றுகூடல் ஒன்றுக்கு தமிழ்மக்கள் பேரவை அழைப்பு விடுத்துள்ளது. இதுதொடர்பில் பேரவை வெளியிட்டுள்ள செய்திக்குறிபில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது

தமிழ் மக்களின் தற்போதய பிரதிநிதித்துவ அரசியலானது மக்கள் பங்களிப்புடன் கூடிய ஒரு அரசியல் பயணமாக மாற்றமடைய வேண்டிய காலகட்டத்திலுள்ளது. இந்த மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கிலும் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை அடைந்துகொள்வதற்கான வழித்தடம் எவ்வாறு அமைய வேண்டும் என்பது தொடர்பிலும், இதில் தமிழ் மக்கள் பேரவையின் வகிபாகம் தொடர்பிலும் சில தீர்மானங்களை மேற்கொள்ளும் மாபெரும் மக்கள் ஒன்றுகூடல் 24.10.2018 (புதன்கிழமை) அன்று காலை 9.30மணிக்கு யாழ்ப்பாணம் – நல்லூர் ஆலய வடக்கு வீதியில் அமைந்துள்ள நடராஜா பரமேஸ்வரி மண்டபத்தில்; நடைபெறவுள்ளது.

இக்கூட்டத்தில் வடமாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவருமான நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் விசேட உரையாற்றவுள்ளதோடு தனது எதிர்கால அரசியல் நிலைப்பாடு தொடர்பிலும் தமிழ் மக்களுக்கு அறிவிக்கவுள்ளார்.

மேற்படி ஒன்றுகூடலுக்கு அரசியல் வேறுபாடுகளைக்கடந்து பொதுமக்கள், பொது அமைப்புக்கள்,தொழில் சங்கங்கள் கல்விச் சமுகத்தினர் மற்றும் இளைஞர்- யுவதிகள், போன்ற அனைத்துத் தரப்பினரையும் கலந்து பங்களிக்குமாறு தமிழ் மக்கள் பேரவை அழைப்புவிடுக்கின்றது.

என்றுள்ளது

வடக்குமாகாணசபையின் பதவிக்காலம் ஒக்டோபர் 23ம்திகதி நிறைவுபெறவுள்ள நிலையில் இக்கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததொன்றாக பார்க்கப்படுகின்றது.

தமிழ்த்தேசிய பேரவையை பலப்படுத்தி மக்கள் இயக்கமாக செயற்படுவது என்றும் தேர்தல் வந்ததும் தேர்தலில் போட்டியிடுவதா இல்லையா என முடிவு செய்யப்படுவது என்றும் இரண்டு வழிகளை இணைத்து ஒரு வழியை முன்வைப்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

No comments:

Post a Comment

Post Bottom Ad