தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் புளொட் அமைப்பின் சார்பில் போட்டியிட்டு மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்ட எஸ்.வியாளேந்திரன் மைத்திரி - மஹிந்த அணி பக்கம் தாவியதையடுத்து புளொட்டிலிருந்து உடனடியாக நீக்கப்பட்டுள்ளார் என அந்தக் கட்சியின் தலைவர் த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
அவர் தமது கட்சியிலிருந்து விலக்கப்பட்டுள்ளமையினால், இலங்கைத் தமிழரசுக் கட்சியிலிருந்து நீக்குமாறு, அந்தக் கட்சியின் செயலருக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளார்.
வியாளேந்திரன் நாடாளுமன்றத் தேர்தலில் புளொட் அமைப்பைச் சேர்ந்தவராக இருந்தாலும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்தில் போட்டியிட்டிருந்தார்.
இந்த நிலையில் அவரை உடனடியாக கட்சியிலிருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதே சித்தார்த்தன் 2010 இல் மகிந்தவை ஆதரித்து பிரச்சாரம் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment