பாராளுமன்றத்திற்குள் நிலவும் சிக்கல்கள் தீர்க்கப்பட்ட பின்னர் விரைவில் தேர்தலை நடத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.
நேற்று (21) மாலை மஹரகம பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போது கட்சியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கொள்ளை அடிப்படையிலான அரசியல் முறைமை மக்கள் விடுதலை முன்னணியில் இருப்பதாகவும் எந்த நிலமை ஏற்பட்டாலும் பணம் கொடுத்து உருவாக்கப்பட்ட இந்த அரசாங்கத்திற்கு ஆட்சி செய்ய உரிமை இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சதித்திட்டங்களை தோற்கடித்த பின்னர் தேர்தலை நடத்துவதே மக்கள் விடுதலை முன்னணியின் அடுத்த கட்ட செயற்பாடகும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment