தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தனுக்கும் இடையில் நேற்றுச் சந்திப்பு நடைபெற்றுள்ளது.
வடக்கு - கிழக்கு அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணியின் கூட்டம் ஜனாதிபதி செயலகத்தில் நேற்றுக் காலை 9.30 மணியிலிருந்து மதியம் வரையில் நடைபெற்றது. இந்தக் கூட்டம் முடிவடைந்த பின்னர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இடையில் சந்திப்பு நடைபெற்றது.
இந்தச் சந்திப்புத் தொடர்பில் இரா.சம்பந்தன் தெரிவித்ததாவது:-
"அரசியல் கைதிகள் விடயம் தொடர்பில் உரிய வகையில் தீர்வு காண இருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால தெரிவித்தார். இந்த விடயம் தாமதிக்கப்பட்டுள்ளது என்பதை ஏற்றுக்கொண்டார். கால சூழலுக்கு ஏற்ப விரைவில் தீர்வு காணுவேன் என்று குறிப்பிட்டார். இதன்போது, நீங்கள் வழங்கிய வாக்குறுதிகளின் அடிப்படையில் செயற்படுங்கள் என்று அவரிடம் கூறினேன்" - என்றார்.
No comments:
Post a Comment