தேர்தலில் மக்களால் நிராகரிக்கப்பட்டவர்களுடன் இணைவதன் மூலம் 2015 ஜனவரி 8 இல் வெளிப்படுத்தப்பட்ட அபிலாசைகளிற்கு துரோகம் செய்யும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சிலரை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க கடுமையாக கண்டித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரகட்சியை அழிப்பதற்கு சிலர் முயல்கின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஏனைய பல கட்சிகள் குழுக்களுடன் இணைந்து நல்லாட்சியை கொண்டுவருவதற்கான யுத்தத்தில் வெற்றிபெற்றது என முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்துகொள்வதன் மூலம் சிலர் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை அழிக்க முயல்கின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியிலிருந்து யார் விலகினாலும் நான் விலகமாட்டேன் என தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி நான் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கு விசுவாசமானவர்களுடன் இணைந்து கட்சியை மீள கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வேன் என தெரிவித்துள்ளார்
No comments:
Post a Comment