50 வீதம் தமிழர்களை கொண்ட மேற்சபையை உருவாக்க நடவடிக்கை - டக்ளஸ் - TamilnaathaM

Breaking

Home Top Ad

Post Top Ad

Sunday, November 4, 2018

50 வீதம் தமிழர்களை கொண்ட மேற்சபையை உருவாக்க நடவடிக்கை - டக்ளஸ்


தமிழ் மக்களின் பிரச்சினை குறித்து ஆராய்வதற்காக பாராளுமன்றத்தில் ஒரு மேற்சபை அமைக்கப்பட வேண்டும் என்று மீள்குடியேற்ற, புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். 

வட மாகாணத்திற்காக ஒதுக்கப்பட்டு பயன்படுத்தப்படாமல் உள்ள நிதியின் மூலம் மக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுப்பதாக இன்று (04) காலை இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். 

இது தொடர்பில அவர் மேலும் குறிப்பிடுகையில், தமிழ் மக்களின் பிரச்சினை குறித்து ஆராய்வதற்காக பாராளுமன்றத்தில் ஒரு மேற்சபை அமைக்கப்பட வேண்டும். இதில் 50 சதவீதமானவர்கள் தமிழ் பேசும் மக்களை பிரதிநிதித்துவப் படுத்துபவர்களாக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டார். 

இது குறித்து விரைவில் அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வருவதாகவும் அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார். 

வட மாகாணத்திற்காக ஒதுக்கப்பட்டு பயன்படுத்தப்படாமல் உள்ள நிதியின் மூலம் மக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டார். இது குறித்து மாவட்ட அரச அதிபர்களுடன் பேசியிருப்பதாக அவர் கூறினார். இதன்படி, நவம்பர் மாத இறுதிப் பகுதிக்குள் ஐயாயிரம் வீடுகளை அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அத்தோடு நஷ்டஈடு கோரி விண்ணப்பித்துள்ளவர்களில் ஆயிரம் பேருக்கு விரைவில் நஷ்டஈட்டை பெற்றுக்கொடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். 

இனப்பிரச்சனைக்கு 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் ஊடாக தீர்வுகாண நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். 

அரசாங்கத்திலுள்ள தரப்புக்களுடன் சுமூகமாக பேசி இதற்கான தீர்வை எட்ட முடியும் என்று அவர் நம்பிக்கை வெளியிட்டார். 

வடக்கு கிழக்கு மாகாண மக்களின் பிரச்சினையை கையாள்வதற்காக விசேட அதிகார சபையொன்றை அமைப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார் . 

No comments:

Post a Comment

Post Bottom Ad