சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூக் ஹக்கீம் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிசாத் பதியூதீன் ஆகியோர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் தற்போது சந்தித்துப் பேச்சு நடத்துகின்றனர்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அழைப்பின் பேரில் அவரது இல்லத்துக்கு சென்ற முஸ்லிம் தலைவர்கள் இருவரும் இந்தச் சந்திப்பில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிய வருகிறது.
ஹக்கீமுக்கு நீதி அமைச்சர் பதவியும் ரிசாத் பதியூதீனுக்கு கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சுப் பதவியும் வழங்கப்படும் என மகிந்த தரப்புத் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment