நந்திக் கடற்கரை மண்ணே அழுதது
நம்பி இருந்திட துரோகங்கள் வென்றது
விஞ்சி படைவரினும் அஞ்ச மறுத்தது -புலி
நஞ்சை அருந்திட கொள்கை நிலைத்தது
நாடுகள் தாண்டியெம் குரல்கள் ஒலித்தது
முள்ளிவாய்க்கால் அதற்கோர் வழியைச் சமைத்தது
ஆளுக்கொரு கொள்கை அவரே கொண்டாரே
பிள்ளைகள் தேடியே தாய்களும் தெருவிலே
அரசமரங்களில் புத்தன் நிலைபெறக் காண்போமா
இனமழிந்த சனத்துக்கு நீதியே இல்லையா
இலங்கையில் ஆதிக்குடி நாங்கள் இல்லையா
வெள்ளை வேட்டிகள் வேசங்கள் போடுமோ
வெள்ளை வான்களும் தெருவினில் ஓடுமோ
பள்ளிக் குழந்தையும் செம்மணிக்குள் மூழ்குமோ
பயங்கர வாதி என்றந்த சட்டம் பாயுமோ
வெட்டவெளிகள் சிறைச் சாலைகள் ஆகுமோ-ஈழம்
வேண்டி விடுதலை யாகங்கள் நீளுமோ
சுட்டு விரலினில் முற்றம் விடியுமே
சுற்றம் எங்கிலும் சொர்க்கம் திரும்புமே
துச்சாதன பேய்களின் ஆட்டம் அடங்குமே
எங்கள் பரம்பரை ஆளத் தொடங்குமே
எங்கள் தமிழன்னை மண்ணே அழைக்குதே
விண்ணதிரட்டும் விடுதலைப் பறவையே பறந்து வா
க.குவே
No comments:
Post a Comment