பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து, சட்ட ரீதியாக அதனை நிறைவேற்றிக் கொள்வதற்காக நாடாளுமன்றத்தினால் பின்பற்றப்பட வேண்டிய வழிமுறைகள் உள்ளதாக அறிக்கையொன்றின் மூலம் பிரதமர் அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது.
குறைந்தபட்சம் 20 நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பங்களுடன் நம்பிக்கையில்லா பிரேரணை சபாநாயகரிடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற செயலாளர் நாயகம் ஊடாக அந்த நம்பிக்கையில்லா பிரேரணையின் சட்டபூர்வ தன்மை குறித்து சபாநாயகர் ஆராய வேண்டும் என்பதுடன், அது அரசியலமைப்பு மற்றும் நிலையியல் கட்டளைகளுக்கு ஏற்படுடையது என்பதை நாடாளுமன்ற செயலாளர் நாயகம் சபாநாயகருக்கு அறிவிக்க வேண்டியுள்ளது.
அதன் பின்னர், குறிப்பிட்ட நம்பிக்கையில்லா பிரேரணை நாடாளுமன்ற நிகழ்ச்சிநிரல் ஒழுங்குப் பத்திரத்தில் உள்ளக்கப்பட வேண்டும்.
அத்துடன் ஒழுங்கு பத்திரத்தை வௌ்ளிக்கிழமை தினமொன்றில் அச்சிட்டு, சகல நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் விநியோகித்து, ஐந்து வேலை நாட்களின் பின்னர் நம்பிக்கையில்லா பிரேரணையை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுத்தல் அவசியம் எனவும் பிரதமர் அலுவலகத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனையடுத்து, ஒழுங்குப் பத்திரத்தில் முக்கியத்துவ அடிப்படையில், அதுகுறித்த விவாதத்திற்கான நாள் குறிக்கப்பட வேண்டும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதன்போது, நாடாளுமன்ற சபை முதல்வர் மற்றும் ஆளுங்கட்சியின் விருப்பத்துடன், நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதத்திற்காக அண்மித்த திகதியொன்று தீர்மானிக்கப்படுதல் அவசியமாகும்.
அந்த தினத்திற்கான விவாதம் சபை ஒழுங்குபத்திரத்தில் உள்ளடக்கப்படுவதுடன், விவாதம் நடத்தப்படும் திகதி உறுப்பினர்களுக்கு அறிவிக்கப்படல் வேண்டும்.
அத்துடன், நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதத்திற்காக ஆளும் கட்சிக்கும், எதிர் கட்சிக்கும் தேவையான கால அவகாசம் வழங்குவது குறித்து நாடாளுமன்ற விவகாரங்களுக்கான செயற்குழுவினால் தீர்மானிக்கப்பட வேண்டும்.
குறிப்பிட்ட தினத்தில், விவாதத்தை நடத்தி, வாக்கெடுப்பு மற்றும் அதுகுறித்த அறிவிப்பு இடம்பெற வேண்டும் என்பதுடன், நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதம் குறித்து, அதே தினத்தில், ஹன்சார்ட் பதிவுகள் வௌியிடப்படுதல் அவசியமாகும்.
இந்த விடயங்கள் அனைத்தையும், அரசியலமைப்பு, நிலையியல் கட்டளைகள், நாடாளுமன்ற சம்பிரதாயங்கள் மற்றும் விதிமுறைகளுக்கு ஏற்புடைய வகையில் முன்னெடுப்பதற்கு நாடாளுமன்றம் பொறுப்புக்கூற வேண்டும் என பிரதமர் அலுவலகத்தினால் வௌியிடப்பட்ட அறிவித்தலில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment