அடுத்த தீபாவளிக்குள் தீர்வு - இம்முறை மைத்திரி உறுதி!! - TamilnaathaM

Breaking

Home Top Ad

Post Top Ad

Tuesday, November 6, 2018

அடுத்த தீபாவளிக்குள் தீர்வு - இம்முறை மைத்திரி உறுதி!!

நாட்டில் நிலையான சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்புவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். 

நேற்று (05) பிற்பகல் ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற விசேட தீபாவளி விழாவில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். 

அடுத்த தீபாவளிக்கு முன்னர் தமிழர்களுக்கான தீர்வை பெற்றுத் தர முயலுவேன். கடந்த 3 வருடங்களாக ஏமாற்றப்பட்டதற்கு நான் பொறுப்பெடுக்கமுடியாது. அதனால்தான் புதிய பிரதமரை நியமித்துள்ளேன். அரசியல் கைதிகள் விடயத்திலும் மகிழ்ச்சியான முடிவு ஒன்றை பெற்றுக்கொடுக்கமுடியும்.

தமிழ்மக்களின் வாக்குகளால்தான் நான் சனாதிபதியாக வந்தேன் என்பதை மறக்கவில்லை. முந்தைய எந்த சனாதிபதியையும் விட அதிக தடவைகள் வடக்கு கிழக்குக்கு சென்றுள்ளேன்.

எனவும் அவர் தெரிவித்தார்.

உலகெங்கிலும் வாழும் இந்துக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு இந்த விசேட தீபாவளி விழா ஜனாதிபதியின் பணிப்புரையின் பேரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

இந்த நிகழ்வில் மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி, தீபாவளி என்பது சமூக நீதி நிலைநாட்டபட்ட தினமாகும் எனக் குறிப்பிட்டார். 

நாட்டில் வாழும் அனைத்து மக்களுக்கும் நீதியும் நியாயமும் கிடைக்கப் பெறவேண்டும் என குறிப்பிட்ட ஜனாதிபதி, அனைத்து மக்கள் மத்தியிலும் ஐக்கியமும் நல்லிணக்கமும் பலப்படுத்தப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார். 

இந்த விழா பல்வேறு கலாசார அம்சங்களைக் கொண்டிருந்ததோடு ஜனாதிபதி அனைத்து இந்த பக்தர்களுக்கும் தனது நல்வாழ்த்துக்களை தெரிவித்தார். 

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, எதிர்கட்சித் தலைவர் ஆர்.சம்பந்தன், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பிரதியமைச்சர் அங்கஜன் ராமநாதன், வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே ஆகியோர் உட்பட பெரும் எண்ணிக்கையான இந்து பக்தர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad