பிரதமர் மகிந்த ராஜபக்ஸ தலைமையிலான அமைச்சரவைக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை அதிக பெரும்பான்மையுடன் சற்று முன்னர் நிறைவேற்றப்பட்டுள்ளது கண்களால் பார்த்து பெரும்பான்மை அறிந்த சபாநாயகர், நவம்பர் மாதம் 19 ஆம் திகதிக்கு பாராளுமன்ற அமர்வை ஒத்திவைத்துள்ளார்.
பாராளுமன்றில் இன்று மிகவும் கீழ்த்தரமாக நடந்துகொண்டார்கள். பொலிஸாரின் கடுமையான பாதுகாப்பு மிளகாய்தூள் தாக்குதல்களுக்கு மத்தியிலேயே நம்பிக்கை வாக்கெடுப்பை நிறைவேற்றினோம் என ஐக்கிய தேசியக் கட்சியின் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.
மேலும் ஆளும் தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டுள்ள நிலையில் சபாநாயகர் கரு ஜயசூரிய அவரது ஆசனத்தில் அமராமலே சபை ஒத்திவைப்பு குறித்த அறிவிப்பை விடுத்துள்ளார். மேலும் பலத்த காவல்துறைப் பாதுகாப்புடன் சபாநாயகர் அழைத்து வரப்பட்டிருந்தார்.
பெயரில் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என, அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், இன்று பாராளுமன்றத்தில் ஏற்பட்ட அமைதியற்ற சூழ்நிலையின் காரணமாக, சபாநாயகர் மேற்கண்டவாறு நடவடிக்கை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.