ரணில் விக்கிரமசிங்கவுக்கு பெரும்பான்மை ஆதரவு இல்லை என்பது உறுதியாக்கப்பட்டுள்ளது. நேற்று பாராளுமன்றத்துக்கு வருகை தந்திருந்திருந்த ஐக்கிய தேசிய முன்னணியின் உறுப்பினர்களின் எண்ணிக்கையினூடாக இவ்விடயம் வெளிப்பட்டுள்ளது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அக்கட்சி நேற்று வெளியிட்ட அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ஐக்கிய தேசிய முன்னணியில் தற்போது 98 உறுப்பினர்கள் மாத்திரமே காணப்படுகின்றனர். பாராளுமன்றத்தில் அறுதிப் பெரும்பான்மை ஆதரவைப் பெற வேண்டுமாயின் 113 உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கப் பெற வேண்டும். இருப்பினும் நேற்றைய தினம் அனைத்துக் கட்சிகளையும் முன்னிலைப்படுத்தி 112 உறுப்பினர்கள் மாத்திரமே வருகை தந்திருந்தனர்.
நேற்று பாராளுமன்றத்துக்கு ஐக்கிய தேசிய முன்னணியின் 98 உறுப்பினர்களும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 12 உறுப்பினர்களும் மக்கள் விடுதலை முன்னணியில் 2 உறுப்பினர்களும் வருைக தந்திருந்தனர். இதனடிப்படையில் தனது பெரும்பான்மை பலத்தை முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உறுதிப்படுத்தத் தவறி விட்டார் என்பது தெளிவாக்கப்பட்டுள்ளது.
வருகை தந்திருந்த மக்கள் விடுதலை முன்னணியின் இருவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 12 பேருமாக மொத்தம் 14 பேரும் பாராளுமன்றத்தை விரைவில் கூட்டுங்கள் என்று குறிப்பிட்டார்களே தவிர ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு தாம் ஆதரவு வழங்குகின்றோம் என்று இதுவரை குறிப்பிடவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment