மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பிரதேசத்தில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரிக்க விஷேட குழுவொன்று மட்டக்களப்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரின் தலைமையில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விஷேட குழுவொன்று அனுப்பப்பட்டுள்ளது.
பொலிஸ் மா அதிபரின் பணிப்புரையின் படி இந்தக் குழு அங்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.
வவுணதீவு வலையிறவு பாலத்திற்கு அருகில் உள்ள பொலிஸ் சோதனைச் சாவடியில் இரவு பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் இனந்தெரியாத ஆயுததாரிகளினால் இன்று அதிகாலை சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment