ஐக்கிய தேசியக் கட்சிக்கும் அதன் தலைமைத்துவத்துக்கும் நெருக்கடிகள் ஏற்படும் நேரங்களில் நாம் ஆதரவை தெரிவிக்கின்றோம், ஆனால் அதற்கான பலனாக தமிழ் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் எப்போது நிறைவேற்றப்படும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கேள்வி எழுப்பியுள்ளனர்.
ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தை அமைத்தவுடன் தமிழர் பிரச்சினைக்கான நிரந்தர தீர்வு பெற்றுத்தரப்படுவது உறுதியென ரணில் - சம்பந்தனுக்கு வாக்குறுதி கொடுத்துள்ளார்.
பிரதான எதிர்க்கட்சியான தமிழ் தேசியக் கூட்டமைப்பு இன்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை அலரிமாளிகையில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர்.
எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 13 பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்றைய கூட்டத்தில் கலந்துகொண்டதுடன் சித்தார்த்தன் எம்.பி மாத்திரம் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை.
இந்நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் குழுவிடம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர்.
ஐக்கிய தேசியக் கட்சியும் அதன் தலைமைத்துவமும் நெருக்கடியில் உள்ள நிலைகளில் எமது ஆதரவை தருகின்றோம். ஆனால் இதற்கான பலன் என்னவென மக்கள் மத்தியில் தெரிவிக்க வேண்டும். அதற்காக நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள் என கேள்வியும் எழுப்பியுள்ளனர்.
No comments:
Post a Comment