திங்கட்கிழமை நாடாளுமன்றம் கூடாது என்கிறார் சுசில்
சிறிலங்கா நாடாளுமன்றம், வரும் திங்கட்கிழமை கூடுவதற்கு வாய்ப்பில்லை என்று, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேம ஜெயந்த தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நாடாளுமன்ற கூட்டத்துக்கான தயார்படுத்தல்களை மேற்கொள்வதற்கு, கால அவகாசம் தேவை. திங்கட்கிழமை நாடாளுமன்றத்தைக் கூட்டுவதற்கு கால அவகாசம் போதாது,
திங்கட்கிழமை நாடாளுமன்றம் கூட்டப்படவுள்ளதாக, வெளியாகிய செய்திகள் தவறாக வழிநடத்தப்படுகின்றவையாகும்.
வரும் நொவம்பர் 16ஆம் நாள், புதிய அரசாங்கம் 2019 வரவுசெலவுத் திட்டத்துக்கான கணக்குகளை தாக்கல் செய்யும்" என்றும் அவர் தெரிவித்துள்ளார்
No comments:
Post a Comment