தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் இன்று சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. எனினும் மாவை சேனாதிராசா இக்கூட்டத்தில் பங்குகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னர் வவுனியாவில் நடைபெற்ற கூட்டத்தில் சனாதிபதியை "எங்களுடைய உப்பைத்தின்றவன் நீ" என பேசியிருந்தமை தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் ஏற்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்று சனாதிபதியை சந்தித்த சுமந்திரன் "மேதகு ஐயா" என விழித்து கதைத்தபோது சனாதிபதி சிரித்ததாகவும் உங்கள் மீது நம்பிக்கை வைத்திருந்தோம் எங்களை ஏமாற்றிவிட்டீர்கள் அதனால்தான் அனைவருக்கும் கோபமான மனநிலை இருந்ததாக சுமந்திரன் சமாளித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும் கூட்டத்தின் முடிவில் நாடாளுமன்றத்தின் ஊடாக பெரும்பான்மை நிருபிக்கப்பட்டால் அதனை ஏற்றுக்கொள்வதாக கூட்டமைப்பினர் தெரிவித்தனர். நாடாளுமன்ற சம்பிராதாயங்கள் நிச்சயமாக பேணப்படும் என மைத்திரி உறுதியளித்தார்.
இந்த சந்திப்பு தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு வௌியிட்டுள்ள அறிக்கை வருமாறு,
"தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தலைமையில், தசெல்வம் அடைக்கலநாதன்பா.உ, சித்தார்த்தன் பாஉ, எம்ஏ.சுமந்திரன் பாஉ ஆகியோர் இன்று ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் "ஜனாதிபதி அதிமேதகு" மைத்திரிபால சிறிசேன அவர்களை ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடினர்.
இந்த சந்திப்பு சுமார் ஒன்றரை மணித்தியாலங்கள் இடம்பெற்றது. நாட்டில் தற்போது நிலவும் சூழ்நிலை தொடர்பில் மிக நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றது.
இதன்போது "அதிமேதகு ஜனாதிபதி" அவர்கள் சில முடிவுகள் எடுக்கப்பட்டதன் பின்னணி குறித்து தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் குழுவினருக்கு விளக்கமளித்தார். இதன்போது தமிழ் தேசிய கூட்டமைப்பினாலும் அதன் பாராளுமன்ற உறுப்பினர்களாலும் எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கான காரணங்களை தமிழ் தேசிய கூட்டமைப்பின் குழுவினர் அதிமேதகு ஜனாதிபதி அவர்களுக்கு எடுத்துக் கூறினார்கள்.
இத்தீர்மானங்கள் ஏற்கனவே பகிரங்கமாக முழு நாட்டிற்கும் உலகிற்கும் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. தாம் ஏற்கனவே எடுத்த தீர்மானங்களை மாற்ற முடியாது என்றும் அத்தீர்மானங்களின் படியே தாம் செயற்படுவோம் என்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் ஜனாதிபதி அவர்களுக்கு விளக்கி கூறினார்கள்.
அனைத்து கட்சிகளினுடைய இணக்கப்பாட்டோடு நாட்டின் அரசியல் சூழ்நிலையை சுமூகநிலைக்கு கொண்டு வருவதற்காக எதிர்காலத்தில் ஜனாதிபதி எடுக்கும் நடவடிக்கைகளுக்கு அவரோடு கலந்தாலோசித்து தமிழ் தேசிய கூட்டமைப்பு தனது முழுமையான ஆதரவை கொடுக்கும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு குழு குறிப்பாக அதிமேதகு ஜனாதிபதிக்கு உறுதியளித்தார்கள்.

No comments:
Post a Comment