எங்களுடன் பேசவந்த விடயத்தை அம்பலப்படுத்துவேன்! நாமல் உள்ளிட்டவர்களுக்கு சுமந்திரன் எச்சரிக்கை
பொதுஜன பெரமுன கட்சி தம்முடன் உடன்பட்ட விடயங்கள் குறித்து பகிரங்கமாக அறிவிக்கப்படும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
கூட்டமைப்பின் சார்பில் விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இந்த எச்சரிக்கையினை விடுத்துள்ளார்.
இலங்கையில் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக கூட்டமைப்பு எடுத்த முடிவை நகைச்சுவையாக்கி, ஐக்கிய தேசிய கட்சியுடன் இரகசிய ஒப்பந்தம் செய்துக்கொள்ளப்பட்டுள்ளதாக தொடர்ந்தும் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படுகின்ற.
எந்தவொரு உடன்படிக்கைக்கும் அமைய ரணில் விக்ரமசிங்க பிரதமராகுவதற்கு தமிழ் தேசியக் கூட்மைப்பு ஆதரவு வழங்கவில்லை. எனினும், கூட்டமைப்பு மீது தொடர்ந்தும் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது.
இந்நிலை நீடித்தால் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச உள்ளிட்ட பொதுஜன பெரமுன கட்சியின் அரசியல்வாதிகள் கூட்டமைப்புடன் கலந்துரையாட முன்வந்த விடயங்கள் குறித்து அம்பல்படுத்த நேரிடும் என்றும் சுமந்திரன் எச்சரித்துள்ளார்.
No comments:
Post a Comment