தமிழ்த் தேசிய கூட்டமைப்பானது விடுதலைப் புலிகளின் அரசியல் இராணுவ புலனாய்வு பிரிவுகளின் முயற்சியாலும் விடுதலைப் புலிகள் மீதான மக்கள் ஆதரவு என்ற தளத்தின் மூலமுமே உருவாக்கப்பட்டது.
இந்த அரசியல் நகர்வுக்கு தனிநபர்கள் யாருமே உரிமைகோரமுடியாது. அது உண்மையான வரலாற்றை பொய்யாக்கும். அத்தகைய தனிநபர் ஒருவர் இருப்பாராயின், அது தமிழீழ தேசிய தலைவர் மட்டுமே.
அப்படி தொடங்கப்பட்ட கூட்டமைப்பில், அன்று தமிழர் விடுதலை கூட்டணி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், ரெலோ, ஈபிஆர்எல்எப் என நான்கு கட்சிகள் இருந்தன. உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டன.
அதில் முதலாவதாக தமிழர் விடுதலை கூட்டணி வெளியேற, தமிழரசுக் கட்சியின் சின்னத்தில் விடுதலைப்புலிகளின் நேரடி கண்காணிப்பில் கூட்டமைப்பின் வேட்பாளர்கள் தெரியப்பட்டனர்.
அதன் பின்னர், 2010 இல் கூட்டமைப்பிலிருந்து, விடுதலைப்புலிகளின் ஆதரவு அணி உறுப்பினர்கள் வெளியேற்றப்பட, அகில இலங்கை தமிழ் காங்கிரசும் வெளியேறியது.
2018 இல் கூட்டமைப்பிலிருந்து ஈபிஆர்எல்எப் உம் வெளியேறிய நிலையில், இன்றும் கூட்டமைப்பு தொடங்கப்பட்ட நாளிலிருந்து இன்றுவரை இருக்கும் கட்சியாக ரெலோவே இருக்கிறது.
அந்த ரெலோவின் பிரதிநிதிகள் கூட, ஒரு குறிப்பிட்ட காலம் வரை தமிழ்த் தேசிய கூட்டமைப்பிலிருந்து விலக்கப்பட்டிருந்தனர்.
அப்படி பார்த்தால் கூட்டமைப்பு தொடங்கப்பட்ட காலத்தில் இருந்து அதனுள்ளே இருந்த கட்சிகள் என எதுவுமே இல்லை.
இப்படி கூட்டமைப்பானது சிதைவடைந்திருக்கும் நிலையில், 2010 இற்கு பின்னர் அரசியலுக்கு வந்த சுமந்திரனும், சயந்தனும் கூட்டமைப்பின் உருவாக்கம் பற்றி விளக்கம் கொடுப்பது எமது காலத்தின் சாபக்கேடே!!
No comments:
Post a Comment