அமைச்சரான சுமந்திரன்! அனைத்து கூட்டமைப்பு எம்பிக்களுக்கும் பல மில்லியன் ஒதுக்கீடு!! - TamilnaathaM

Breaking

Home Top Ad

Post Top Ad

Sunday, January 13, 2019

அமைச்சரான சுமந்திரன்! அனைத்து கூட்டமைப்பு எம்பிக்களுக்கும் பல மில்லியன் ஒதுக்கீடு!!

செம்பியன் பற்று அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் ஒரு மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்பட்டதாக வெளியிடப்பட்ட செய்தி தொடர்பில் பலத்த சந்தேகங்கள் வெளிவந்தவண்ணமுள்ளன.

அமைச்சரவை மூலம் ஒதுக்கப்பட்ட நிதியில் அமைக்கப்பட்ட பாடசாலை கட்டடம் தனது நிதியில் அமைக்கப்பட்டதாக சுமந்திரன் அறிவித்துள்ளதன் மூலம் ஐக்கிய தேசிய கட்சியின் அமைச்சராக சுமந்திரன் செயற்படுவதாகவே எண்ணவேண்டியுள்ளது. வடக்கு மாகாண அபிவிருத்தி அமைச்சராக ரணில் விக்கிரமசிங்கவே உள்ள நிலையில் ரணிலின் பெயரில் சுமந்திரனே செயற்படுவது கண்டறியப்பட்டுள்ளது.

இதேபோன்ற நிதி ஒதுக்கீடுகள் அனைத்து தமிழ்த்தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஒதுக்கப்பபட்டுள்ளதாகவும் சுமந்திரனின் செய்திக்குறிப்பு தெரிவிக்கின்றது.





சுமந்திரனால் ஊடகங்களுக்கு அனுப்பப்பட்ட செய்திக்குறிப்பு வருமாறு:

செம்பியன் பற்று அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் நிதி ஒதுக்கீட்டில் வகுப்பறைக் கட்டடம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கம்பெரலியா திட்டத்தின் கீழ் ஏராளமான நிதிகள் கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்டன. இதனால் வடக்கின் சகல பிரதேசங்களும் துரித அபிவிருத்தியை எதிர்கொண்டு வருகின்றன.

அந்தவகையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஊடகப் பேச்சாளருமாகிய எம்.ஏ.சுமந்திரன், தனக்கு ஒதுக்கப்பட்ட நிதியின் ஓர் அங்கமாக செம்பியன்பற்று அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலைக்கு ஒரு மில்லியன் ரூபாவை கம்பெரலியா திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு செய்துள்ளார்.

அந்த நிதியில் மேற்படி வகுப்பறை அமைக்கப்பட்டு நேற்று நாடாளுமன்ற உறுப்பினரைக் கல்லூரிச் சமூகம் வரவேற்று அவரூடாகக் கட்டடத்தைத் திறந்துவைத்துள்ளது. இந்த நிகழ்வில் வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் ச.சுகிர்தனும் கலந்துகொண்டார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad