இலங்கையின் சுதந்திர தினமான இன்று யாழ் பல்கலைக்கழகத்தில் ஏற்றப்பட்ட இருந்த தேசியக் கொடி இறக்கப்பட்டு கறுப்புக்கொடி கொடி ஏற்றப்பட்டுள்ளது. மேலும் பல்கலைக்கழக சூழலில் கறுப்பு கொடிகளும் பறக்கவிடப்பட்டுள்ளன.
இலங்கையின் 71 ஆவது சுதந்திர தினம் இன்றாகும். சுதந்திர தினத்தை முன்னிட்டு சுதந்திர தின நிகழ்வுகள் நாட்டின் பல பாகங்களிலும் நடைபெற்று வருகின்றன.
ஆனால் வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் பகுதிகளில் சுதந்திரம் கரிநாளாகப பிரகடனம் படுத்தி கறுப்புக்கொடி கொடிகள் பறக்கவிடப்பட்டது போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
இதற்கமைய சுதந்திர தினத்தை கரிநாளாகப் பிரகடனப்படுத்தியது யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் பல்கலைக்கழகத்தில் கரிநாள் பதாகைகளையும் எமக்கு எப்போது சுதந்திர தினம் எனக் குறிப்பிட்டுள்ள பல்கலைக்கழகத்தைச் சூழ கறுப்பு கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளது.
இந் நிலையில் பல்கலைக்கழகத்திற்குள் ஏற்றப்பட்டிருந்த தேசியக் கொடி இறக்கப்பட்டு கறுப்புக்கொடி கொடி ஏற்றப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது .
No comments:
Post a Comment