கேப்பாபுலவு மக்களில் சிலர் சொந்த காணிகளை கோரியுள்ளனர் மற்றும் சிலர் மாற்று காணி கோரியுள்ளனர், இன்னும் சிலர் நஸ்டஈட்டு கோரிக்கையை வழங்கியுள்ளனர்.
எனவே ஒரு ஒற்றுமையான நிலைப்பாட்டை ஏற்படுத்துவன் மூலமே கேப்பாபுலவு காணிப்பிரச்சினைக்கு தீர்வு காணமுடியும் என்று வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இன்றைய தினம் கேப்பாபுலவு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த 3 பேரை சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
40 நாட்கள் பங்களிப்பில் கேப்பாபுலவு காணிவிடுவிப்பு பிரச்சினை சாதாரண நிலைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான உண்மை ஒன்றை முன்வைக்கின்றேன்.
52 குடும்பங்களின் காணி உறுதி பத்திரங்களையும் தகவல் அறியும் சட்டத்தின் மூலம் 14 நாட்களில் மாவட்ட செயலகத்தில் இருந்து பெற்றுக்கொள்ளுங்கள்.
சிலர் சொந்தக்காணிகள் வேண்டும் என்று கோரியுனர் இன்னும் சிலர் மாற்றுக்காணிகள் பெற்றுக்கொள்ள விரும்புகின்றனர். 11 பேர் நட்டஈடு தருமாறு கோரியுள்ளனர்.
இதனால் நான் ஒரு தனிப்பட்ட குழு ஒன்றை உருவாக்கவுள்ளேன். அந்த குழுவினுடைய தொலைபேசி இலக்கம் மட்டும் பத்திரிகையில் வெளியிடப்படும்.
அதனூடாக காணி உரிமையாளர்கள் ஒவ்வொருவரும் தொடர்பை ஏற்படுத்தி தமது சொந்தக்காணிகள் தொடர்பில் என்ன நிலைப்பாட்டில் உள்ளார்கள் என்று எழுத்து மூலமாக உரிமையுடன் அறிவிக்கவும்.
இதன் மூலம் மாற்றுக்கருத்துக்கள் அனைத்தும் ஏற்ற பின்னர் யார் யார் கேப்பாபுலவு இராணுவ மூகாம் அமைந்துள்ள தமது காணிகள் எமக்கு தேவை என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளார்களோ அவர்களுக்கும் முன்நாட்களில் இராணுவத்தினர் வழங்கிய மாற்றுக்காணிகளும் தமக்கு தேவை என்ற நிலப்பாட்டை முன்வைப்பவர்களும் மாவட்ட அரசாங்க அதிபரின் தலைமையில் இராணுவத்தினரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபடமுடியும்.
மேலும் நான் ஆளுநர் பதிவி ஏற்று இன்றுடன் 40 நாட்கள். இந்த நாட்களுக்குள் 4 தடவைகள் கேப்பாபுலவு மக்களை சந்தித்துள்ளேன். எனவே கேப்பாபுலவு மக்களின் பிரச்சினை தீர்க்கப்படவேண்டும்.
பொதுவாக கண்ணீருடன் வந்து நிற்கு பெண்களை பார்க்கும்போது என் அம்மாவின் நினைவுதான் வரும். ஏனெனில் என்னுடை தாயார் கண்ணீர் சிந்தியவாரே பல தடவைகள் என்னை சந்தித்துள்ளார்.
எனவே தயவு செய்து இந்த பிரச்சினையை தீர்ப்பதற்கு மக்களாகிய நீங்கள் முன்வரவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment