அம்மாச்சி உணவகம் "வன்னி அறுசுவையகம்" என பெயா் மாற்றம் செய்யப்பட்டு மு ன்னாள் ஜனாதிபதி சந்திாிக்கா பண்டாரநாயக்கா அம்மையாாினால் இன்று காலை திறந்துவைக்கப்பட்டுள்ளது.
இதன்போது நெடுங்கேணி பிரதேச செயலக கலாசார மண்டபத்தில் தேசிய ஒருமை ப்பாடு மற்றும் நல்லிணக்க செயலகத்தினால் வடக்கில் ஏற்படுத்தபட்டுள்ள வேலை திட்டங்கள் பற்றியும்,
எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள வேலை திட்டங்கள் தொடர்பாகவும் பொது ம க்களுடன் கலந்துரையாடியுள்ளார். குறித்த நிகழ்வில் முன்னாள் மாகாணசபை உறு ப்பினர்களான ஜி.ரி.லிங்கநாதன்,
ப.சத்தியலிங்கம், பிரதேசசபை தலைவர் இ.தணிகாசலம், அரச அதிபர் எம்.கனீபா, பிரதேச செயலாளர் க.பரந்தாமன், அரச அதிகாரிகள், பொலிஸார் என பலரும் கல ந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தமிழரசுக்கட்சியினர் மேற்கொண்ட காழ்ப்புணர்வான நடவடிக்கையே முன்னர் வடமாகாண முதல்வர் தலைமையில் திறக்கப்பட்ட அம்மாச்சி பெயர் மாற்றம் நடைபெற காரணம் என கூறப்படுகிறது.
No comments:
Post a Comment