தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பெண்கள் எழுச்சி மாநாடு யாழ்.நகரின் வீரசிங்கம் மண்டபத்தில் இன்று ஆரம்பமாகி நடைபெற்றுவருகின்றது.
முன்னதாக தமிழ் கலாச்சார ஊர்வலத்துடன் முனியப்பர் ஆலயத்தை அண்மித்து புறப்பட்டு தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் பங்கெடுத்த போது பலி கொள்ளப்பட்ட பொதுமக்கள் நினைவு தூபியில் அஞ்சலியுடன் வீரசிங்கம் மண்டபத்தை சென்றடைந்திருந்து.
வடகிழக்கின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் பெருமளவிலான பெண்கள் திரண்டு பங்கெடுத்த வரலாற்று பதிவு மிக்க இந்நிகழ்வாக பெண்கள் எழுச்சி மாநாடு இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது.
மார்ச் 8ம் திகதி சர்வதேச மகளிர் தினமாக கடைப்பிடிக்கப்பட்டுவருவது தெரிந்ததே.
No comments:
Post a Comment