கெட்டதிலும் சில நல்லதுகள் நடக்கும் என்பது போல், மன்னார் சம்பவம் புலிகளின் பண்பாட்டை மீளுருவாக்கம் செய்யவும்/ சமகால அரசியல் போலிகளை அடையாளம் காணவும் உதவியிருக்கிறது.
இதில் குறிப்பான இரு விடயங்களை மட்டும் இங்கு குறிப்பிடுகிறேன்.
01. புலிகள் மத விழுமியங்களுக்கு மதிப்பளித்தது குறிப்பாக முஸ்லிம்கள் வெளியேற்றத்தின் போது இதே மன்னார் மாவட்டத்தில் காக்கையன்குளப் பிரதேசத்தில் அமைந்திருந்த பள்ளிவாசல் புலிகளின் அப் பிரதேச பொறுப்பாளரினால் சேதப்படுத்தப்பட்டதை அறிந்த தலைவர் அவருக்குக் கடுமையான தண்டனை வழங்கியது மட்டுமல்ல அதை மீளவும் புனரமைத்து பராமரிக்கவும் உத்தரவிட்டார். இதை இன்று பலரும் நினைவு கூறுகின்றனர்..
இது புலிகளின் மத ஒருமைப்பாட்டிற்கு ஒரு எடுத்துக்காட்டு மட்டுமல்ல, முஸ்லிம்களை வெளியேற்றியது இனச் சுத்திகரிப்பு உள்ளடக்கங்களை கொண்டதல்ல என்பதற்கும் ஒரு சான்று.
02.மத அடிப்படையில் தமிழர்களை பிளந்து இன அழிப்பைத் துரிதப்படுத்த இந்திய வலையமைப்பால் உற்பத்தி செய்யப்பட்ட ஒரு அமைப்புத்தான் ஈழத்து சிவசேனை என்பது அம்பலமாகியது.
ஏனெனில் பவுத்த பேரினவாதம் சைவர்களின் கோவில்களையும்/ பண்பாட்டு அடையாளங்களையும் ஆக்கிரமித்து அழித்துக் கொண்டிருக்கும்போது மவுனமாக இருந்து விட்டு தற்போது மன்னார் சம்பவம் நடந்த ஈரம் காயும் முன்பே விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பைக் கொண்டு கண்டன அறிக்கை வெளியிட்டு தம்மை அம்பலப்படுத்தியுள்ளது.
எல்லாம் நன்மைக்கே...
இனியாவது நாம் புலிப் பண்பாட்டைத் தொடர்வோம்.
No comments:
Post a Comment