திருகோணமலையில் சம்பூரில் கட்டப்பறிச்சான் கிளிவெட்டி நல்லூர் போன்ற பிரதேசங்களில் மக்களைச் சந்தித்த கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர் சம்பந்தன் ஐயா அவர்கள் 'உங்கள் 5000 பேருக்கும் வேலை வாங்கித் தருவேன் என்னால் அதை செய்ய முடியும். நான் உங்களுக்கான தொழிலைக் கேட்டாலோ அல்லது உங்களுக்கான பாடசாலையை கேட்டாலோ வீதிகளைக் கேட்டாலோ அதை உங்களுக்குச் செய்வதற்கு அரசாங்கம் செய்ய தயாராக இருக்கின்றது. ஆனால் நான் அதைக் கேட்க மாட்டேன்.
அந்த சலுகைகளைக் கேட்டால் உங்கள் உரிமைகளை நான் எப்படி பெறுவது. அதனால் தான் சலுகைகளைப் பெறுவதற்கு நான் முயற்சிக்காமல் உங்களின் உரிமைகளைப் பெறுவதற்கு முயற்சிக்கின்றேன்'. என்று கூறினார்.
அன்று மேற் கூறிப்பிட்ட பிரதேச மக்களின் அடிப்படைத் தேவைகளை உரிமைகளைப் பெற வேண்டும் என்பதற்காக அவற்றினை சலுகைகள் என்று கூறி தட்டிக்கழித்த சம்மந்தன் ஐயா தனக்கு கிடைத்த சலுகைகளான
• கொழும்பு - 07இல் 1.5 காணியுடன் சொகுசு மாளிகை (3 பில்லியன் பெறுமதி அதாவது 300கோடி)
• V8 KX 2330 ,Discovery KO 6339 இலக்கங்கள்
உடைய 2 அதி சொகுசு வாகனங்கள்
• மாதாந்தம் 600 லீற்றர் பெற்றோல்
• வீட்டு வேலைகளுக்கு 5 பணியாளர்கள்
• தண்ணீர் கட்டணம்
• மின்சார கட்டணம்
என்பவற்றை மட்டும் ஏன் மறுக்காமல் ஏற்றுக்கொண்டார் என்பதன் அர்த்தம் விளங்கவில்லை
நாம் சலுகைகளைப் பெற்றுக் கொண்டால் அந்த சலுகைகளே நாளை எமது உரிமைக்களாக மாறிவிடும் அபாயம் உள்ளது என்பது சாமானிய மக்களுக்கு மட்டுமல்ல எமது அரசியல் தலைவர்களுக்கும் பொருந்தும்
ஆக சலுகைகளை சாமானிய பொதுமக்கள் பெற்றுக் கொள்ள கூடாது என்றுரைக்கும் மக்கள் பிரதிநிதிகள் தங்களுக்கு கடைக்கும் சலுகைகளை முதலில் ஏற்றுக் கொள்ளாதிருத்தல் வேண்டும்.
பதிவர் - பார்த்தீபன் வரதராஜன்
No comments:
Post a Comment