கம்பெரலிய திட்டத்தின் ஊடாக மாகாணங்களுக்கான அதிகாரங்கள் பறிக்கப்படுகின்றன என அபிவிருத்தி குழு கூட்டத்தில் ஈபிடிபி குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனது.இக்குற்றச்சாட்டுக்கு பதிலளித்த நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமாகிய சுமந்திரன் முன்னதாக இதே போன்று மாகாணசபையின் அதிகாரத்தை பறித்துக்கொண்டுவரப்பட்ட திவிநெகும திட்டத்திற்கு ஈபிடிபி ஆதரவளித்தாக பதிலுக்கு குற்றஞ்சுமத்தியிருந்தார்.
இதேவேளை திவிநெகும மாகாணத்தின் அதிகாரத்தை பறிக்க துணை போனது என குற்றம் சாட்டும் கூட்டமைப்பு கம்பரெலிய திட்டத்தின் மூலம் அதே வேலையைதான் செய்கிறீர்கள்,அடுத்தவரை குற்றம் சொல்லும் நீங்கள் செய்வது சரியா..? நியாயமா? என பதிலுக்கு ஈபிடிபி கேள்வியெழுப்ப சுமந்திரன் தரப்பு அமைதியாகியிருந்தது.
No comments:
Post a Comment