நம்பமுடியாமல் இருக்கிறது 🔥
அரசியலுக்கு வந்தபோது, தமிழருக்கு நல்லதொரு தலைமைத்துவம் கிடைத்திருக்கிறது என நம்பினோம். ஆனால் தொடர்ந்து நீங்கள் தளம்பலான தவறான முடிவுகளை எடுத்தபோது விமர்சித்தோம். இரண்டு ஆண்டுகளின் பின்னர், மீளவும் தமிழ்த்தேசியம் சார் நிலைப்பாட்டை வெளிப்படுத்தியபோது மகிழ்ச்சி அடைந்தோம்.
ஆனாலும் அந்த தளம்பல் அந்த தயக்கம் தொடர்ந்தபடியே இருந்தது. இதனால் ஏமாற்றமாக இருந்தபோதும், மாற்றங்கள் வரும் என்று எதிர்பார்த்தோம்.
தம்பி பிரபாகரன் என்றும் தமிழர்களின் ஒப்பற்ற விடுதலை போராட்டத்தை நடத்திய தலைவன் என்றும் நீங்களே மேடைகளில் கூறிவிட்டு, இன்று உங்கள் உள்ளத்தை திறந்திருக்கிறீர்கள்.
சம்பந்தமே இல்லாமல், ஈபிஆர்எல்எப் ஐ நியாயப்படுத்துவதற்காக, அனைவர் கையிலும் இரத்தக்கறை உண்டு. அதுவும் விடுதலைப்புலிகளின் கைகளிலும் இரத்தக்கறை உண்டு என்ற உங்கள் ஒப்பீடு கோபமடைய வைக்கிறது.
வெளியில் ஒரு பேச்சு அந்தரங்க கடிதங்களில் இன்னொரு பேச்சு என்ற இரட்டை வேடம் உங்கள் நம்பகத்தன்மையை கேள்விக்குட்படுத்துகிறது.
ஈபிஆர்எல்எப் இன் முன்னைய இரத்தக்கறைகளை காரணம் காட்டி அவர்களை இணைக்கவேண்டாம் என எவரும் உங்களிடம் கேட்கவில்லை. 2009 இற்கு பின்னர், ஈபிஆர்எல்எப் எடுத்த முடிவுகளில் தவறுகள் இருக்கின்றன.
அதனை புறந்தள்ளி ஈபிஆர்எல்எப் ஐ உள்ளே எடுத்தால், அதனை போலவே தளம்பல் நிலையில் உள்ள ரெலோ புளொட் பிள்ளையான் ஆனந்தசங்கரி என ஒவ்வொரு அணியும் வரும். பின்னர் இந்த தளம்பலான அணிகள், மீளவும் மிகவும் ஆபத்தான கூட்டமைப்பு ஒன்றை உருவாக்கும். அதனால் மீளவும் மக்கள் ஏமாற்றப்படுவார்கள் என்ற வாதமே முன்வைக்கப்பட்டது.
ஆனால் நீங்கள் வேண்டுமென்றே, ஒரு தரப்பினை நியாயப்படுத்த, எமது விடுதலை இயக்கத்தை உள்ளே இழுத்து விமர்சிக்கிறீர்கள்.
முன்னாள் நீதியரசர் அவர்களே
எமது விடுதலை இயக்கத்தின் தியாகங்களை அறிந்துகொள்ளுங்கள்.
தங்கள் சாவிற்கு திகதி குறித்து வீரச்சாவடைந்த கரும்புலிகள்,
இறுதி யுத்தத்தில் மக்களை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக, தங்களால் எழுந்து நடக்க முடியாத நிலையிலும் சக்கை கட்டி காவல் காத்து வெடித்து சிதறிய ஒப்பற்ற உன்னதங்கள்,
தங்கள் வாழ்வை தொலைத்து, தேசத்திற்காய் மரணித்த 50000 இற்கு மேற்பட்ட ஆண் பெண் மாவீரர்கள்,
இன்றும் தம் வாழ்வை தொலைத்தும், சோரம் போகாமல் தேசியத்துக்காகவே வாழும் மக்கள்,
இத்தனையும் அந்த அற்புதமான தியாகங்களால்தான் உருவானது.
அதனை உங்கள் இழிவான அரசியலுக்கு தயவுசெய்து பயன்படுத்தாதீர்கள்.
குறிப்பு:
குறித்த கடிதம் முதலாவது கருத்தில் இணைக்கப்பட்டுள்ளது. அதில் குறிப்பிடப்படும் பகுதி இதுதான்.
Blood already in the hands of many erstwhile groups and parties. Even the Tigers. - விடுதலைப்புலிகள் உட்பட பெரும்பாலான முன்னாள் இயக்கங்களின் கட்சிகளின் கரங்களில் இரத்தக்கறை உண்டு.
கடிதத்தின் உண்மைதன்மையை Kandiah Arunthavabalan அவர்கள் ஏற்றுக்கொண்டு அதற்கு சுமந்திரத்தனமான விளக்கம் கொடுத்திருப்பது அதிர்ச்சி.
பதிவர் - கீதன் இளையதம்பி
No comments:
Post a Comment