பகிடிவதை செய்த நான்கு மாணவிகள் மீது ஆறு இலட்சம் தண்டப்பணம்! நீதிமன்றம் உத்தரவு!! - TamilnaathaM

Breaking

Home Top Ad

Post Top Ad

Saturday, August 24, 2019

பகிடிவதை செய்த நான்கு மாணவிகள் மீது ஆறு இலட்சம் தண்டப்பணம்! நீதிமன்றம் உத்தரவு!!

கொழும்பு கல்வி நிறுவனம் ஒன்றில் மாணவி ஒருவர் மீதான பகிடிவதை குற்றசாட்டு தொடர்பாக தொடரப்பட்ட வழக்கு ஒன்றில் நான்கு மாணவிகளும் ஒரு மாணவனும் குற்றவாளிகளாக இனங்காணப்பட்டனர். இச்சம்பவம் தொடர்பான தீர்ப்பிலேயே ஆறு இலட்சம் ரூபா தண்டப்பணம் செலுத்துமாறு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.



கடந்த வருடம் மே மாதம் 12 ஆம் திகதி குறித்த கல்வி நிறுவனத்தில் கல்வியை தொடர்ந்த வெலியத்தவை சேர்ந்த மாணவி மீது நடைபெற்ற பகிடிவதையை தொடர்ந்து தனது டிப்ளோமா கல்வியை இடைநிறுத்தும் அளவுக்கு பாதிப்படைந்துள்ளார் என்றும் வழக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிற்றுண்டிச்சாலைக்கு முன்பாக முழங்காலில் இருத்தி வைக்கப்பட்ட மாணவி தொடர்ச்சியான வசவுவார்த்தைகளால் பேசப்பட்டதாகவும் அதனைத் தொடர்ந்தே பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டு வழக்கு முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad