✍️ ஆண்டுதோறும் ஒதுக்கப்படும் சாதாரண நிதியை, கம்பரெலிய என சிங்கள பெயரில் எடுத்து, தங்களது தலைப்பாகை படத்துடன் வெளியிட்டது தவிர, கூட்டமைப்பு செய்தது என்ன?
✍️ இத்தனை உயிர்களை இழந்த மண்ணில், மக்களால் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகளாக கூட்டமைப்பு செய்தது என்ன?
✍️ ஒவ்வொரு தடவையும் வாகன அனுமதிப்பத்திரத்தை பெற்று, விற்ற பின்னர், காணி வாங்கி சொத்து சேர்த்தது தவிர, கூட்டமைப்பு செய்தது என்ன?
✍️ கம்பரெலிய என்ற திட்டம் ஊடாக ஒழுங்கைகளுக்கு மண்ணை நிரப்பி, அதன் குத்தகையிலும் காசு பிடுங்கி, கோயில் கேணிகளை சுத்தம் செய்து விட்டு, ஊருக்கே குளம் கட்டியதாக குளக்கோட்டன் மாதிரி போஸ்ரர் அடித்து ஒட்டியது தவிர, கூட்டமைப்பு செய்தது என்ன?
✍️ 500 கரும்புலிகள், 50000 மாவீரர்கள், இரண்டு இலட்சம் மக்கள் இத்தனை தியாகத்தின் உன்னத்தை உணர்ந்திருந்தால் பத்து வருடத்தில் இத்தனையும் மறந்து சோரம் போயிருப்பார்களா?
✍️ மக்களின் பிரச்சனைகளை பேசுங்கள் என தெரிவுசெய்த அனுப்பிவிட, ரணிலின் மடிக்கணனியை காவிக்கொண்டு ஹெலிகொப்ரரில் பறந்தது, அரசியல் கைதிகளின் விடுதலைக்கா? அல்லது அந்த குடும்பங்களின் வாழ்வாதாரத்தை வளர்த்துவிடவா?
✍️ மத்திய வங்கியில் ஊழல் மோசடி செய்த ரணிலை காப்பாற்றுவதற்காக, ஆங்கிலத்தில் இருந்த 8000 பக்க விசாரணை அறிக்கையை தமிழில் தந்தால் தான் விவாதிக்க முடியும் என சொல்லுவதற்காகாகவா இவர்களை நாடாளுமன்றம் அனுப்பினோம்?
✍️ ஒரு கிராமத்திற்கு தேவையான விடயத்தை கூட பேரம்பேசி பெற்றுக் கொடுக்கமுடியாதவர்களா எமது மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்போகின்றார்கள்?
✍️ எழுபது வயதை கடந்தும், இன்னமும் பதவி ஆசை எனும் பித்து பிடித்துப்போனவர்கள் - இளமை வாழ்வில் தங்கள் இன்னுயிரை துறந்தவரை ஒரு கணம் நினைத்திருப்பார்களா? அல்லது ஒரு மலர் தூவி அஞ்சலித்து இருப்பார்களா?
🚴♂️ இது உங்களுக்கான நேரம்? முடிவு உங்கள் கையில் ?
🚴♂️ தேசம் குறித்த பற்றுதலும், நாளைய எதிர்காலம் பற்றிய தேடலுமாய், எங்கள் மக்கள் என்ற பற்றுதலோடு என்றும் எங்களோடு என்று கடந்த பத்து ஆண்டுகளாய் உங்களோடு நின்றவர்கள் யார் என்பதை தீர்மானியுங்கள்.
🚴♂️ இது உங்களுக்கான நேரம்? முடிவு உங்கள் கையில்?
- கீதன் இளையதம்பி -
No comments:
Post a Comment