65000 டொலர் வாகனம் தான் வேணும் என 45000 டொலரை திருப்பி அனுப்பினாரா விக்கி? - TamilnaathaM

Breaking

Home Top Ad

Post Top Ad

Tuesday, June 23, 2020

65000 டொலர் வாகனம் தான் வேணும் என 45000 டொலரை திருப்பி அனுப்பினாரா விக்கி?

தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் உட்பூசல்கள் வெளியாகி மக்கள் மத்தியில் அம்பலப்பட்டு நிற்கும் நிலையில் விக்கினேஸ்வரன் மீது அடுக்கடுக்கான குற்றசாட்டுக்களை சுமத்தியுள்ளது தமிழரசுக்கட்சியின் கனடா கிளை.

அதன் அனைத்துப்பொறுப்பான தங்கவேலு அனுப்பிவைத்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

“வாகன உரிமத்தை விற்று அந்தப்பணத்தைத் தமக்கு எடுக்கலாம்” எனக் குற்றம் சாட்டும் விக்னேஸ்வரனது தமிழ் மக்கள் தேசியக் சுட்டமைப்பின் செயலாளர் சிவசக்தி ஆனந்தனை பக்கத்தில் வைத்துக் கொண்டுதான் இப்படிக் குற்றம் சாட்டுகிறார்! 

சிவசக்தி ஆனந்தன் தனக்குக் கிடைத்த வாகன உரிமத்தை விற்றவர் என்பது உலகறிந்த உண்மை. அதை வசதியாக விக்னேஸ்வரன் மறந்து விட்டார். சரி அது போகட்டும். விக்னேஸ்வரனது யோக்கியதை என்ன? அவர் சொகுசு வாகனத்துக்கு விண்ணப்பித்தாரா இல்லையா? தனக்கு அ.டொலர் 45,000  பெறுமதியான வாகனத்துக்கு கிடைத்த உரிமம் தவறானது. முதலமைச்சர் என்ற முறையில் எனக்கு அ.டொலர் 65,000 பெறுமதியான வாகனத்தை இறக்குமதி செய்ய உரிமையுண்டு எனப்  பத்திரிகைகளுக்கு அறிக்கை விட்டார்.

வரியில்லாத கார்களை அமைச்சர்கள், முதலமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் இறக்குமதி செய்யலாம் என்பது ஒரு சலுகை. உரிமையில்லை. அமைச்சரவைதான் அப்படியான முடிவை எடுத்தது. அதே அமைச்சரவைதான் அப்படியான சலுகையை நாட்டின் நிதி நிலைமையைக் காரணம் காட்டி நிறுத்தியது.

“வடமாகாண முதலமைச்சரின் உரித்து வேறு, அதை நடைமுறைப்படுத்தும் நடவடிக்கைகள் வேறு என்பதை அமைச்சர் மங்கள சமரவீர சரியாகப் புரியாது விட்டுள்ளார் என்றே தோன்றுகிறது. அதனால் அவருக்கு உடனே கடிதம் எழுதி, தீர்வையற்ற வாகன அனுமதிப் பத்திரம் எனக்கு வழங்கவேண்டியது சட்டப்படி எனது உரித்து என்றும், அதனை வழங்குமாறும் கேட்டுள்ளேன்” என்றார் விக்னேஸ்வரன்.

வாகனத்தின் பெறுமதியான அ.டொலர் 65,000 (6.5 கோடி உரூபா)  பெறுமதியான காரை இறக்குமதி செய்வதற்கு மகன் பணம் தருவார் என்றார் விக்னேஸ்வரன்.  அவரது மகன் ஒரு கோடீசுவரனாக இருப்பது மெத்த மகிழ்ச்சியைத் தருகிறது. பின்  எதற்காக நான் ஒரு பிச்சைக்காரன் தேர்தலுக்குச் செலவழிக்கப் பணம் இல்லை, மக்களாகிய நீங்கள்தான் பணம் தரவேண்டும் என்று கெஞ்சுகிறார்?

விக்னேஸ்வரன்  பற்றைக்குள் இருந்த இரண்டு பறவைகளைப் பிடிக்க ஆசைப்பட்டு கையில் இருந்த ஒரு பறவையை பறக்கவிட்டவன் மாதிரி   கைக்கு வந்த அ.டொலர் 45,000  பெறுமதியான  வாகன உரிமத்தை திருப்பி அனுப்பிவிட்டு அ.டொலர் 65,000 உரிமத்துக்கு ஆசைப்பட்டதால் இரண்டை யும்  இழந்தார். இதைத்தான் பெரியோர்கள் பேராசை பெரும் நட்டம் என்று சொல்லி வைத்துள்ளார்கள்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை சரியில்லை, அவர்களது அணுகுமுறை சரியில்லை, பதவிக்காகவும் சலுகைகளுக்காகவும் பணத்துக்காகவும் தமிழ் இனத்தை விற்று விட்டார்கள் என விக்னேஸ்வரன் ஓயாது ஒழியாது குற்றம் சாட்டி வருகிறார்.

விக்னேஸ்வரன் கண்ணாடி வீட்டில் இருந்து கொண்டு கல் எறியக் கூடாது. தனக்குக் கிடைத்த வாகன உரிமத்தை கோடிகளுக்கு விற்றுவிட்ட தமிழ்த் தேசிய மக்கள்  முன்னணியின்  செயலாளர் சிவசக்தி ஆனந்தனைப்  பக்கத்தில் வைத்துக் கொண்டு ததேகூ நா.உறுப்பினர்கள் மீது சேறு வாரிப் பூசக் கூடாது.

No comments:

Post a Comment

Post Bottom Ad