சுமந்திரனின் பெயரில் 2 வீடுகள், கார்கள் 03 சாவித்திரியின் பெயரில் ஒரு வீடு! - TamilnaathaM

Breaking

Home Top Ad

Post Top Ad

Saturday, June 27, 2020

சுமந்திரனின் பெயரில் 2 வீடுகள், கார்கள் 03 சாவித்திரியின் பெயரில் ஒரு வீடு!

நேற்றைய தினம் கொழும்பு நிப்பொன் ஹொட்டலில் குறித்த அமைப்பினர் ஏற்பாடு செய்திருந்த விசேட சந்திப்பில் ஊடகவியலாளர்கள் முன்னிலையில் பாராளுமன்ற உறுப்பினர்கள் கெளரவ M.A சுமந்திரன், கெளரவ வாசுதேவ நாணயக்கார, கெளரவ தாரக பாலசூரிய, கெளரவ எரான் விக்ரமரத்ன, விதுர விக்கிரமநாயக்க ஆகிய ஐந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது சொத்து விவரத்தை அறிவித்துள்ளனர்.


சுமந்திரன் தொடர்பில் அனைவரும் எதிர்பார்ப்பது அவர் மிகவும் செல்வாக்குள்ள ஒரு நாடாளுமன்ற உறுப்பினர். இன்று நாட்டை நிர்ணயிப்பவராகவே அவர் காணப்படுகின்றார். ஒரு மிகவும் திறமைவாய்ந்த – சட்ட ஆளுமையுடைய – ஜனாதிபதி சட்டத்தரணி. பல கோடிகளுக்’கு அதிபதியாக இருப்பார் என்று யாரும் எண்ணலாம். ஆனால், அவ்வளவுக்கு பெருந்தொகைப் பணம் அவரிடம் இருப்பதாகத் தோன்றவில்லை. இருப்பவற்றில் பெரும்பாலானவை அவர் 2010 ஆம் ஆண்டு அரசியல்வாதி ஆகி, நாடாளுமன்றுக்குச் செல்வதற்கு முதல் கொள்வனவு செய்யப்பட்டவை என்பதும் குறிப்பிடத்தக்கது.

மாதாந்த சம்பளம் 51285 ரூபா சாவித்திரி சுமந்திரன் பணிபுரியும் நிறுவனத்தில் பெறும் ஊதியம் 1,100 அமெரிக்க டொலர்
சொய்சாபுரத்தில் வாழ்க்கைத் துனைக்கு ஒரு தொடர்மாடி (இது நாடாளுமன்ற உறுப்பினராவதற்கு முன்னர் 23 மே 1999 கொள்வனவுசெய்யப்பட்டது)

றிச்சாட் பேர்ஸ் என்ற பங்குச் சந்தையில் மனைவியின் பெயரில் 100 பங்குகள் சாவித்திரியின் பெயரில் 5 லட்சம் ரூபா பெறுமதியான நகைகள்
மோட்டார் கார்கள் 03 சுமந்திரனின் பெயரில் 2 வீடுகள்
சாவித்திரியின் பெயரில் ஒரு வீடு (இவை அனைத்தும் நாடாளுமன்ற உறுப்பினராவதற்கு முன்னர் கொள்வனவு செய்யப்பட்டவை)
பயன்பெறு காணி ஒன்று 2014 ஆம் ஆண்டு ஒரு காணி கொள்வனவு செய்திருக்கின்றார்.


ஹற்றன் நஷனல் வங்கி வெள்ளவத்தையில் 7 வட்சத்து 34 ஆயிரத்து 356 ரூபா பணம் வைப்பில் உள்ளது. நாடாளுமன்ற இலங்கை வங்கிக் கிளையில் 2 லட்சத்து 25 ஆயிரத்து 228 ரூபா பணம் வைப்பில் உள்ளது.

இதுவே சுமந்திரனின் சொத்தின் பெறுமதி.

தகவல் - சுமந்திரனின் இணையம் - நியுசுதந்திரன்

1 comment:

  1. Nice article super information and write about more articles about it.
    Keep it up! Keep writing

    www.biofact.in

    ReplyDelete

Post Bottom Ad