2020 ஆம் ஆண்டின் சிறந்த விவசாய விஞ்ஞானியாக கிளிநொச்சி பிராந்தியவிவசாய ஆராச்சி அபிவிருத்தி நிலையத்தின் மேலதிக பணிப்பாளர் (ஆராச்சி) கலாநிதி எஸ்.ஜே.அரசகேசரிக்கு வழங்கப்பட்டுள்ளது.
நேற்று (19) பேராதனையில் இடம்பெற்ற நிகழ்வில் இவ்விருது வழங்கி
வைக்கப்பட்டுள்ளது. வருடந்தோறும் விவசாயத்துறையில் புதிய
கண்டுப்பிடிப்புக்களை மேற்கொள்ளும் ஆராச்சியாளர்களில் சிறந்த ஒருவர்
தெரிவு செய்யப்பட்டு இவ் விருது வழங்கக்கப்பட்டு வருகிறது. கடந்த 22
வருடங்களாக இவ்விருது வழங்கப்பட்டு வருகிறது.
22 வருடங்களாக இடம்பெற்று வருகின்ற இவ் விருது வழங்கும் நிகழ்வில் முதன் முதலாக தமிழர் ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இலங்கையின் விவசாய திணைக்களத்தினரால் வருடந்தோறும் இவ் விருது வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டு வெங்காயம், நிலக்கடலை, மிளகாய், மா, குரக்கன் போன்ற பயிர்களில் ஆராச்சியின் மூலம் புதிய இனங்களை கண்டுபிடித்தமைக்காக இவ்வாண்டுக்கான விவசாய விஞ்ஞானியாக கலாநிதி அரச கேசரி தெரிவு செய்யப்பட்டு விருது சான்றிதழ், தங்கப்பதக்கம், 25 ஆயிரம் ரூபா பணம் என்பன வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment