வடக்கு கிழக்கில் மூன்றுநாள் தொடர் போராட்டம் - தமிழ்த்தரப்புகள் அனைத்தும் ஆதரவு! 3 DAYS - TamilnaathaM

Breaking

Home Top Ad

Post Top Ad

Friday, January 29, 2021

வடக்கு கிழக்கில் மூன்றுநாள் தொடர் போராட்டம் - தமிழ்த்தரப்புகள் அனைத்தும் ஆதரவு! 3 DAYS


வடக்கு, கிழக்கு சிவில் அமைப்புகள் எதிர்வரும் 03ஆம் திகதி முதல் 06ஆம் திகதி வரையில் முன்னெடுக்கும் ஜனநாயக ரீதியான போராட்டத்திற்கு வடக்கு, கிழக்கில் உள்ள அனைத்து கட்சிகளும் அமைப்புகளும் ஆதரவு வழங்க முன்வரவேண்டும் எனத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


இன்று மட்டக்களப்பில் உள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.


வடக்கு, கிழக்கில் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்படும் அடக்கு முறைகளுக்கு எதிராகவும் அவற்றினை சர்வதேசத்தின் கவனத்தினை ஈர்க்கும் வகையிலும் முன்னெடுக்கும் இந்த போராட்டத்திற்கு அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் அனைவரையும் ஒன்றிணையுமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


அவர் மேலும் தெரிவிக்கையில்,

பாதிக்கப்பட்டிருக்கின்ற மக்களுக்கு ஒரு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காகவும், வடக்கு, கிழக்கில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற தீவிரமான நில ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்தக் கோரியும், தமிழ் மக்களின் கலை, கலாச்சார, பண்பாட்டு விழுமியங்களைப் பேணுகின்ற இடங்கள் சிதைக்கப்படுவதனை தடுக்கும் முகமாகவும், பாதிக்கப்பட்டிருக்கின்ற மக்கள் சார்பாக ஐ.நா மனிதவுரிமைப் பேரவையிலே அரசியற் கட்சிகளாலும் சிவில் அமைப்புகளாலும் ஒருங்கிணைக்கப்பட்டு எங்களுடைய மக்களுக்கான சரியான நிரந்தரமான தீர்வை பெறுவதற்காக முன்வைக்கப்பட்டிருக்கின்ற பிரேரணையை வலுப்படுத்தும் முகமாகவும் வடக்கு கிழக்கிலே எதிர் வருகின்ற 3ஆம் திகதி தொடக்கம் 6ஆம் திகதி வரை ஜனநாயக ரீதியான ஒரு போராட்டத்தை முன்னெடுப்பதற்கு அவர்கள் அறிவித்திருக்கின்றார்கள்.


பொறுப்புள்ள கட்சி என்ற அடிப்படையில் தமிழ் மக்களுக்கு இந்தப் போராட்டத்திற்கு சிவில் அமைப்புகளுக்கு எங்களுடைய தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சார்பாக வடக்கு கிழக்கில் இருக்கின்ற அனைத்து அமைப்புக்களையும் இந்தப் போராட்டத்திற்கு முழுமையான ஆதரவினை வழங்க வேண்டும் என்பதைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.


சிவில் அமைப்புக்கள் வடக்கு கிழக்கிலே நடைபெறுகின்ற நில ஆக்கிரமிப்புகளையும் அதனை வெளிக்கொண்டு வருகின்ற ஊடகவியலாளர்கள், சிவில் அமைப்பைச் சேர்ந்தவர்களுக்கு இராணுவத்தால் விடுக்கப்படுகின்ற அச்சுறுத்தல்களைத் தடுப்பதற்காகவும் நாங்கள் அனைவரும் இந்தப் போராட்டத்திற்கு ஒத்துழைக்க வேண்டும்.


அரசியல் பேதங்களை மறந்து தமிழர்கள் என்ற அடிப்படையில் வர்த்தக அமைப்புக்கள், பொது அமைப்புகள், மதகுருக்கள் அனைவரும் அரசியலைக் கடந்து இதற்கு ஒத்துழைப்பை வழங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad