கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், லொஹான் ரத்வத்தவிற்கு எதிராக அரசாங்கம் மேற்கொள்ளவிருக்கும் சட்டநடவடிக்கை என்னவென்றும் கேள்வியெழுப்பியுள்ளார்.
இதன்போது மேலும் கருத்துரைத்த அவர்,
இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் செயற்பாடுகளை கண்டிக்கின்றோம். அவரது தந்தையான முன்னாள் பாதுகாப்பு அமைச்சர்
அமரர் அனுருத்த ரத்வத்த அன்றைய நாட்களில் போர்க் களத்திற்கு விஜயம் செய்து எம்மையும் சந்திப்பார்.ஆனால் அவர் மீதான மதிப்பினை இழக்கச் செய்கின்ற அளவுக்கு தற்போது லொஹான் ரத்வத்தவின் செயற்பாடு அமைந்துள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் நடந்தகாலத்தில் விடுதலைப் புலிகளைப் பார்த்து லொஹான் ரத்வத்த ஓடி ஒளிந்திருப்பார். மரண பயத்தில் இருந்த நபர் அவர்.
ஆனால் நீண்டகாலமாக சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அப்பாவி முன்னாள் போராளிகளை சென்று சந்தித்து அவர்களை முழந்தாழிடச் செய்து அவர்களின் தலையில் துப்பாக்கியை வைத்து மிரட்டியுள்ளார். இது சண்டித்தனமல்ல. இதுபோன்ற செயலை தைரியசாலிகளும் செய்வதில்லை. மாறாக இழிவு சிந்தனை கொண்டவர்களே இதனை செய்வார்கள்.
சிறைச்சாலையில் நானும் இருந்துள்ளேன். அங்கு தமிழ்க் கைதிகள் அனுபவிக்கின்ற துன்பங்களை அறிந்துள்ளேன். இதுபோன்ற நபர்கள் மீண்டும் வந்து மிரட்டினால் கைதிகள் அனைவரும் இணைந்து தாக்குதல் நடத்தி தூக்கியெறிய வேண்டும்.
அப்படி செய்தால் நாங்கள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த மக்களும் கைதிகளுக்காக நிற்பார்கள். இதுபோன்ற ஈனச்செயலை செய்தவர்களுக்கு மன்னிப்கே கிடையாது என்றார்.
No comments:
Post a Comment