தயாபரனின் குற்றசாட்டு தவறானது. கடிதம் அனுப்பப்பட்ட பின்னர் பேரணி நடத்துவது செத்த பாம்பை அடிப்பது என சொல்லுகின்றீர்கள். ஆனால் இது கடிதத்தோடு முடிகின்ற செயற்பாடு அல்ல.
புதிய யாப்பு வர இருக்கின்றது. அதில் இந்த 13 ஐ இணைத்து தமிழர்கள் கேட்டதால் கொடுக்கின்றோம் என கோத்தபாயவுடன் இணைந்த நிகழ்ச்சி நிரலை செய்வதே நடக்கின்றது.
அது பற்றிய கவனயீர்ப்பே இந்த பேரணி.
இந்த பேரணியை விடுத்து பீரிஸ் வருகின்ற நிகழ்வில் ஆர்ப்பாட்டம் செய்ய ஆலோசனை சொல்லும் இவர்களை பற்றிய புரிதல் அனைவருக்கும் அவசியமானது.
பேரணி நடந்த அன்றும் ஊடகராக வலம் வந்த அவர் பேரணியில் கலந்துகொண்டவர்களிடம் "நீங்கள் ஏன் பேரணியில் வந்து கலந்துகொண்டீர்கள்?" என கேள்வி கேட்டு ஏதாவது எதேச்சையாக வரும் பதில்களை வைத்து "பேரணியில் கலந்துகொண்டவர்களுக்கே விளக்கம் இல்லை" என ஒரு பரப்புரை செய்யஇருந்தார். ஆனால் மாவீரர்களை பெற்ற தாய்மாரின் பதிலை கேட்டு ஓடி ஒளிக்கவேண்டிய நிலை அவருக்கு வந்தது.
மக்கள் விழித்துவிட்டார்கள்.
No comments:
Post a Comment